கல்வி உதவித்தொகை வழங்குவதாக நுாதன மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்

சேலம்: மேச்சேரி, இளம்பிள்ளை, நங்கவள்ளியை சேர்ந்த சிலர், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:

எங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு சிலர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

அவர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் பெயர்களை கூறி, 'கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை இரு தவணையாக, 38,000 ரூபாய் வழங்கப்படும்' என கூறி, 'ஓ.டி.பி.,'யை கேட்டனர். நாங்களும் கொடுத்தோம். சிறிது நேரத்தில், வங்கி கணக்கில் இருந்து, 11,000 முதல், 38,0000 ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு, மீண்டும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

Advertisement