போதையில் வடிகாலில் தவறி விழுந்தவர் பலி

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் சக்-திவேல், 46; நுாற்பாலை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வெப்படை பஸ் ஸ்டாப் அருகே உள்ள குடியிருப்பு பகு-தியில் செல்லும் வடிகால் மேலே அமர்ந்து மது குடித்துள்ளார்.


போதை தலைக்கேறிய நிலையில், வடிகாலில் தவறி விழுந்-துள்ளார். நேற்று காலை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வடிகாலில் சக்திவேல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்-தனர்.இதுகுறித்து அவரது மனைவி சுகவனேஸ்வரி கொடுத்த புகார்-படி, வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement