பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதனை மேற்கு மாவட்ட தி.மு.க., பரிசு வழங்கல்

ப.வேலுார்: கடந்தாண்டு நடந்த பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பரிசு வழங்கும் விழா, பரமத்தியில் உள்ள தாலுகா லாரி உரிமையாளர் சங்க அரங்கில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில், பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு, தனியார் பள்ளி மாணவர்கள், 222 பேருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலாளர் வக்கீல் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''மாணவர்கள், தினசரி நாளிதழ்களை படித்து, நாட்டு நடப்பை அறிந்து-கொள்ள வேண்டும். காலை, 5:00 மணிக்கு எழுந்து பாடத்தை படித்தால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம்,'' என்றார். பரமத்தி ஒன்றிய செயலாளர் தன்ராசு, இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், நகர செயலாளர் முருகன், ரமேஷ்பாபு, பெருமாள், கருணாநிதி, ராமலிங்கம், மத்-திய ஒன்றிய செயலாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, பள்ளியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாண-வியின் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி பாராட்டினார்.

Advertisement