நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையாது: கலெக்டர் உறுதி
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம், காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலை அமையது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரி-வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு வகையான தொழில் வளர்ச்சி-களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரங்களை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான தொழில் வளர்ச்சி பெற்று வருகி-றது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையிலும், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற வகையிலும், தொழிற்சாலை அமைய இருப்பதாக வரும் தவ-றான தகவல்களை யாரும் பொதுமக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது சட்டத்திற்கு உட்-பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தொழில்துறை சார்பில் அமைக்கப்படும் தொழிற் பூங்கா-விற்கு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய-வற்றை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்-டத்திற்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை