கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ப.வேலுார் நீர்வளத்-துறை உதவி செயற்பொறியாளர் வினோத்குமார் அறிவுறுத்தி-யுள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் அதிகளவு திறந்து விடப்படலாம். நேற்று முன்தினம் இரவு முதல், மேட்டூர் அணையில் இருந்து, 75,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படு-கிறது.
இதனால் காவியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரையோரம் உள்ள சோழசிராமணி, மாரப்பம்-பாளையம், குரும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர்பா-ளையம் அணைக்கட்டு, ஜேடர்பாளையம் பரிசல் துறை, கண்டிப்-பாளையம் பரிசல் துறை, வடகரையாத்துார், கு.அய்யம்பா-ளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதி-களில் வசிக்கும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்க-ளுக்கு செல்ல வேண்டும்.
மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம், 1077, காவல்துறை, 100, தீயணைப்பு துறை, 101, மருத்-துவ உதவி, 104, ஆம்புலன்ஸ் உதவி, 108 ஆகிய எண்களில் சம்-பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement