குலாலர் சங்கம் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

ப.வேலுார்:பரமத்தியில், குலாலர் சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்-தது. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.


மாவட்ட தலைவர் சிங்காரவேலு, பரமத்தி சங்க தலைவர் குப்பு-சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி சங்க துணை தலைவர் வேலுசாமி அனைவரையும் வரவேற்றனர்.நாமக்கல், சேலம் மாவட்ட கல்வி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம், குலாலர் சமுதாயத்தை சேர்ந்த, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்-டினார்.
பொருளாளர் தியாகராஜன் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலு-வலர் செல்வராஜ், சேலம் மாவட்ட சங்க தலைவர் பொறியாளர் ராஜா, செயலாளர் சஞ்சீவி, துரை, சஞ்சீவ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, சங்க தீர்மானங்களை நிறை-வேற்றினார். பரமத்தி சங்க செயலாளர் தமிழ் மணி நன்றி கூறினார்.

Advertisement