49 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர் சந்திப்பு

ப.வேலுார்: ப.வேலுார் கந்தசாமி கண்டர் கல்லுாரியில், கடந்த, 1973-76ம் ஆண்டில் பி.காம்., பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாண-வர்கள், 49 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்-தது. முன்னாள் மாணவர் நல்லதம்பி தலைமை வகித்தார். பன்-னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில், தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த பேராசிரியர்களான சந்திரசேகரன், ரங்கநாதன், கந்தசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து, 49 ஆண்-டுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள், தங்களின் கல்லுாரி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

Advertisement