சென்னியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

அரூர்: அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்ம-புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில்
அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்தவுடன் தினமும்,
ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஆடிப்-பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின், ஆற்றில் புனித நீராடிய அவர்கள்,
அங்குள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பொரி துாவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலி-யிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Advertisement