அ.தி.மு.க., பொதுசெயலாளர் நாளை சிவகங்கையில் பயணம்
சிவகங்கை : 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மூலம் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நாளை சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, நாளை மாலை 4:30 மணிக்கு காரைக்குடி ஐந்து விளக்கு சமீபம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.
பிரசார வாகனம் மூலம் திருப்புத்துார் வரும் அவர், மாலை 5:030 மணிக்கு அண்ணாதுரை சிலை அருகேயும், இரவு 7:45 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் முன் மக்களை சந்தித்து பேசுகிறார்.
சிவகங்கையில் அன்று இரவு தங்குகிறார். ஜூலை 30 அன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை சன்ராக்ஸ் மகாலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள், மஞ்சுவிரட்டு, பந்தயம், வடமாடு நல சங்கங்கள், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அன்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை முத்துராமலிங்க தேவர் சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.
அ.தி.மு.க., அனைத்து அணி, பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், என்றார்.
மேலும்
-
நெல்லையை உலுக்கிய ஐ.டி., ஊழியர் ஆணவக் கொலை: எஸ்.ஐ., தம்பதிக்கு வலை
-
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம்; தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
-
திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைக்க முனைப்பு காட்டும் முதல்வர்; அண்ணாமலை விமர்சனம்
-
இனியாவது திருந்த வேண்டும் இந்த திராவிட மாடல் அரசு; எச்சரிக்கும் அன்புமணி
-
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியால் முடங்கியது பார்லிமென்ட்: லோக்சபா, ராஜ்யசபா ஒத்திவைப்பு
-
பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்