பார்லியில் நாளை பிரதமர் மோடி, அமித் ஷா உரை; எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில்

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாளை பார்லிமென்டில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
பார்லிமென்டில், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தை இன்று (ஜூலை 28) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். ஆபரேஷன் சிந்தூரின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசின் நிலைப்பாடு உள்ளிட்டவை பற்றி அவர் விரிவாக உரையாற்றினார்.
ராஜ்நாத் சிங் உரையை அடுத்து, அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் பேசினர். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை என்றால் அது எப்படி வெற்றியாகும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை (ஜூலை 29) நண்பகல் 12 மணியளவில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் விளக்கம் அளிக்க உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைவரின் உரையைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை 5 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் விதம் பிரதமர் மோடியும் பேச உள்ளதாக தகவலகள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.





மேலும்
-
யு.பி.ஐ.,யில் புதிய மாற்றங்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்
-
பணமூட்டை சிக்கிய விவகாரம் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் 'கிடுக்கி'
-
காட்டு யானைகள் தாக்கி கிராம மக்கள் பலி; கர்நாடகாவில் வனத்துறை அலுவலகம் முற்றுகை
-
'குத்தா பாபு'வின் மகன் 'டாக் பாபு' பீஹாரில் இருப்பிட சான்றால் சர்ச்சை
-
'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம் காங்கிரசுக்கு 'நோ' சொன்ன தரூர்
-
பிரதமர் நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் சொதப்பல்; சைவ ஆதீனகர்த்தர்கள் கடும் கொந்தளிப்பு