ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி காங்கிரஸ் பேசலாமா: பாஜ எம்.பி. கேள்வி

6

புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது எப்போது என்று காங்கிரஸ் உறுப்பினர் பேசியது வேடிக்கையாக இருந்தது என்று பாஜ எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து லோக்சபாவில் விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் துணை தலைவர் கவுரவ் கோகாய் பேசுகையில், ''பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நீண்ட விளக்கம் அளித்தார். ஆனால் பஹல்காமில் பயங்கரவாதிகள் எப்படி வந்தனர்,'' என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசியதை தொடர்ந்து, பாஜ எம்பி பைஜயந்த் ஜெய் பாண்டா பேசியதாவது:

பாகிஸ்தான் காஷ்மீரை எப்போது திரும்பப் பெறுவோம் என கவுரவ் கோகாய் கேட்ட போது அது வேடிக்கையாக இருந்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றி காங்கிரஸ் பேசலாமா? ரபேல் விமானங்களின் எண்ணிக்கை மற்றும் சீனா பற்றிய கேள்வியை அவர் குறிப்பிட்டதும் வேடிக்கையாக இருந்தது. இந்தியா 'குனிந்து போனது' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்,

'சரணடைதல்' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியதும், சீனா பற்றிய கேள்வி தொடர்பாகவும் பேசியதால் அவரது கட்சி தலைவர் இன்று உற்சாகமாக இருப்பார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதில் எத்தனை முறை சரணடைந்துள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவது அவசியமானது. அவரது சரண்டர் பேச்சு வேடிக்கையாக இருந்தது. ஆனால் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு பைஜயந்த் ஜெய் பாண்டா பேசினார்.

Advertisement