பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்; புடினுக்கு 12 நாள் காலக்கெடு விதித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: "உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில், உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 28) ரஷ்யா போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு விதித்த 50 நாள் காலக்கெடு குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பதாவது: உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய அதிபர் புடின் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்திய டிரம்ப், என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
அதிபர் புடினால் நான் ஏமாற்றம் அடைந்து உள்ளேன். நான் அவருக்கு வழங்கிய 50 நாட்கள் கெடுவை குறைக்கப் போகிறேன். ஏனென்றால் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன், என்றார்.





மேலும்
-
மாவட்டத்துக்கு ஒரு சூரிய கிராமம்; விரிவான திட்ட அறிக்கைக்கு 'டெண்டர்'
-
யு.பி.ஐ.,யில் புதிய மாற்றங்கள்; ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்
-
பணமூட்டை சிக்கிய விவகாரம் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் 'கிடுக்கி'
-
காட்டு யானைகள் தாக்கி கிராம மக்கள் பலி; கர்நாடகாவில் வனத்துறை அலுவலகம் முற்றுகை
-
'குத்தா பாபு'வின் மகன் 'டாக் பாபு' பீஹாரில் இருப்பிட சான்றால் சர்ச்சை
-
'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம் காங்கிரசுக்கு 'நோ' சொன்ன தரூர்