கல்லுாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பல்கலை ஆசிரியர்கள் சங்கம், மூட்டா அமைப்புகளின் சார்பில் பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த காத்திருப்பு போராட்டத்தை மூட்டா பொதுச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் பெரியநம்பி, உதவிபெறும் கல்லுாரி அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, துணைமேயர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா நிறைவுரையாற்றினார்.
அரசாணை பிறப்பித்து நான்கு ஆண்டுகளாகியும் அரசு உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணிமேம்பாட்டுப் பயன் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. அதனை, நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
மேலும்
-
ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு