சீதா, ராம திருக்கல்யாணம்

ஓசூர், ஓசூரில் லோக ஷேம பக்த மண்டலி டிரஸ்ட் சார்பில், சீதா, ராம திருக்கல்யாண மகோத்சவ விழா இரு நாட்கள் நடந்தன. விக்னேஸ்வர பூஜை, குரு கீர்த்தனை, அஸ்டபதி பஜனை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற முத்துக்குத்தல் நிகழ்ச்சி நடந்தன.


பின்னர் சீர் வரிசைகள் மற்றும் திருமாங்கல்யத்திற்கான சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஹிந்து வைணவ சம்பிரதாய முறைப்படி, நேற்று முன்தினம் காலை, 9:00 முதல், மதியம், 1:30 மணி வரை சீதா, ராம திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, ராமர், சீதைக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement