'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம் காங்கிரசுக்கு 'நோ' சொன்ன தரூர்

புதுடில்லி : பார்லிமென்டில், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து பேச காங்கிரஸ் எம்.பி., சசி தரூரை அக்கட்சி மேலிடம் அணுகியதாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
பஹல்கா ம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன.
காங்., - எம்.பி., சசி தரூரின் பெயரை அக்கட்சி மேலிடம் பரிந்துரைக்காத நிலையில், அவரது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற சசி தரூர், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய அரசை பாராட்டினார். இது, கா ங்., தலைவர்களை எரிச்சல் அடையச் செய்தது.
பா ர்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ல் துவங்கிய நிலையில், லோக்சபாவில் நேற்று, ஆப்பரேஷன் சிந்துார் குறித்து விவாதம் நடந்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். காங்., சார்பில் கவுரவ் கோகோய் பேசினார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக, முக்கிய பிரச்னை பற்றிய விவாதத்தில் யார் யார் பேசப் போகின்றனர் என்ற பட்டியலை, லோக்சபா சபாநாயகரிடம் அனைத்து கட்சிகளும் முன்கூட்டியே கொடுக்க வேண்டும்.
இந்நி லையில், 'ஆப்பரேஷன் சிந்துார் விவாதத்தில் பேசுகிறீர்களா?' என, மூத்த எம்.பி., என்ற அடிப்படையில், சசி தரூரிடம் காங்., மேலிடம் கேட்டது. இதற்கு, 'முடியாது' என, அவர் பதிலளித்தார்.
ஆப்பரேஷன் சிந்துார் விவகாரத்தில், அவருக்கும், கட்சிக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், அவர் பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம், இந்திய துறைமுக மசோதா - 2025 குறித்து, அவர் பேச விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
-
தமிழகத்தை மீட்க முதற்படி: இபிஎஸ் வலியுறுத்தல்
-
பிளஸ் 2 மாணவி துாக்கிட்டு தற்கொலை
-
பெண்களை விமர்சித்த வழக்கு யூடியூபரின் ஜாமின் ரத்து: புதுச்சேரி சிறையில் மீண்டும் அடைப்பு
-
கடலுார் சுமங்கலி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை
-
மொளசூர் மகா பெரியவா நகர் அக்ரஹாரம் பிளாட் வாங்குவோருக்கு ஆடி சிறப்பு தள்ளுபடி
-
முன்னாள் ஊராட்சி தலைவர் மீது கலெக்டரிடம் ஊழல் புகார்