கோயில்களில் ஆடிப்பூரம்

தேவகோட்டை: தேவகோட்டை காமாட்சி அம்மன் கோயில் ஆடிப்பூர விழா 2ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று நுாற்றுக்கணக் கானோர் பால்குடம் எடுத்தனர். மாலையில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மானாமதுரை: வெள்ளிக்குறிச்சி ஜெயபுஷ்பவன நாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

பெண்கள் கோயில் முன் கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement