சிவகங்கையில் கபர்ஸ்தான் கல்லறை தோட்டத்திற்கு நிலம் 

சிவகங்கை: சிவகங்கையில் முஸ்லிம் களுக்கான கபர்ஸ்தான், கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம் அமைக்க தலா 1 ஏக்கர் நிலத்தை கலெக்டர் பொற்கொடி வழங்கினார்.

சிவகங்கையில் முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் மற்றும் கிறிஸ்தவர் களுக்கான கல்லறை தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என ஜமாத் மற்றும் கிறிஸ்தவர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை கலெக்டர் பொற்கொடி வழங்கினார். இந்த ஆணையை சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளி வாசல் தலைவர் காஜாமொய்தீன், அலங்கார அன்னை உதவி பாதிரியார் ஸ்டீபன் பெற்றனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜய குமார் உடனிருந்தனர்.

Advertisement