கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து  மானியம்

சிவகங்கை: திருப்புத்துார், திருப்புவனம் ஒன்றிய பகுதியில் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு ஊட்டச் சத்து வழங்க 50 சதவீத மானியம் வழங்கப் படுகிறது.

கால்நடைகளுக்கு உலர் மற்றும் பச்சை, அடர் தீவனம் உரிய நேரத்தில் வழங்கினால் மட்டுமே பால் உற்பத்தி அதிகரிக்கும். கறவை மாடுகளுக்கான செலவினத்தில் 70 சதவீதம் தீவனத்திற்கே செலவாகிறது.

இதையடுத்து திருப்புத்துார், திருப்புவனம் ஒன்றியத்தில் 100 கால்நடை விவசாயிகளை தேர்வு செய்து, 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் 4 மாதத்திற்கு ஒரு பசுவிற்கு அடர் தீவனம் 360 கிலோ, 4 கிலோ தாது உப்பு கலவை வழங்கப்படும். 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் பயன்பெற, பங்களிப்பு தொகை ரூ.6500 செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement