பராமரிப்பு இல்லாத வாகனங்கள் தவிக்கும் துாய்மை பணியாளர்கள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் குப்பை அள்ள பயன்படும் வாகனங்கள் போதிய பராமரிப்பு இன்றி ரோட்டில் அடிக்கடி பழுதாகி நிற் பதால் முழுமையாக குப்பையை அகற்ற முடியாமல் சுகாதார கேடு நிலவி வருகிறது.
திருப்புவனத்தில் தினசரி ஆறு டன் குப்பை வரை சேகரிக்கப்படுகின்றன. குப்பை சேகரிக்க இரண்டு டிராக்டர்கள், நான்கு மினி வேன், 18 பேட்டரி வாகனங்கள் உள்ளன.
தூய்மை பணிகளை மேற்கொள்ள 23 நிரந்தர, தினக்கூலி அடிப்படையில் 80 தூய்மை பணி யாளர்கள் உள்ளனர். குப்பை அள்ள பயன் படுத்தப்படும் வாகனங்களில் ஒரு டிராக்டர், மூன்று மினி வேன்கள், எட்டு பேட்டரி வாக னங்கள் பல மாதங் களாக பழுதடைந்து கிடக்கின்றன.
பேட்டரி வாகனங்களை முறையாக பரா மரிக்காததால் பழு தடைந்து விட்டன. ஒருசில பேட்டரி வாகனங்களில் பேட்டரிகள் மாயமாகி விட்டன. குப்பை அள்ள பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழுதடைந்து கிடப்பதால் அனைத்து வார்டுகளிலும் குப்பை முறையாக அகற்றப் படுவது இல்லை.
சிறிய ரக வேனும் அடிக்கடி பழுதாகி துாய்மை பணியாளர்கள் வாகனங்களை தள்ளி வரவேண்டியுள்ளது. வாகனங்களைமுறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?