ஆடிபூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கரூர், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தமிழகம் முழுவதும், நேற்று ஆடிப்பூரம் விழா அம்மன் கோவில்களில், வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் மாரியம்மன் கோவில், அன்ன காமாட்சியம்மன் கோவில், தான்தோன்றிமலை காளியம்மன் கோவில், ஆதி மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி, நேற்று மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, வேம்பு மாரியம்மன் மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே, திருகாடுதுறை மாரியம்மன் கோவில், மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரர் கோவில், நன்செய் புகழூர் கண்டியம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், நத்தமேடு அங்காளம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில், புன்னம் சத்திரம் பகவதி அம்மன் கோவில்களிலும், ஆடி பூரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் கோவில்களில், மூலவர் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* க.பரமத்தி அருகில், உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் போன்ற மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* குப்பம் காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோவில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திப்பாளையம் பொன்னாட்சியம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் தேவேந்திரகுல தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் உள்ள செல்லாண்டிம்மன், மாரியம்மன், காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், மாங்கல்யம் நீடிக்கவும் வலியுறுத்தி குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை துாவி பெண்கள் பக்தியுடன் வழிபட்டனர்.

Advertisement