மக்களைத் தேடி முகாம் மூலம் அரசு ஊழியர்கள் புலம்பல் ...: கூடுதல் பணி சுமையால் மற்ற பணிகள் பாதிப்பு

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு சேவைகள் வீடு தேடி வரும் முகாமால் மற்ற தினசரி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், முகாம் பணிகளையே அலுவலகத்தில் தொடர வேண்டி இருப்பதாக வருவாய் , ஊரக வளர்ச்சி துறையினர் புலம்பி வருகின்றனர்.
மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் உங்களுடன் ஸ்டாலின் எனும் வீடு தேடி வரும் அரசு சேவைகள் முகாம் நடந்து வருகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இம்முகாம்களை நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் வருவாய், ஊaக வளர்ச்சி, சுகாதாரம், கூட்டுறவு உள்ளிட்ட 15 துறையினர் பங்கேற்கின்றனர். வருவாய் ,ஊரக துறைக்கு அதிகமான மனுக்கள் வருவதால் அத்துறையினர் முகாம் முடிந்தாலும் இது தொடர்பான பணிகளையே பார்க்க நேரிடுகிறது.
இதன் காரணமாக வருவாய்த் துறையில் ஆன்லைனில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க முடிவதில்லை. அது சம்பந்தமாக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தாரை பார்க்கவும் முடிவதில்லை. இது பொதுமக்களின் புலம்பலாக இருக்கிறது. அரசு துறையினரோ முகாம் பணிகளை மட்டுமே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என புலம்புகின்றனர். ஊரக வளர்ச்சி துறையினர் முகாம் செலவினங்களை செய்து முடித்து மீண்டும் பணத்தை பெறுவது குதிரை கும்பாக இருப்பதாகவும் புலம்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நன்கு திட்டமிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அலுவலக பணியிலும் கவனம் செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
..........
மற்ற பணிகள் பாதிப்பு
நாலரை ஆண்டுகளாக செய்யாத சாதனையை இந்த முகாம் மூலம் செய்துவிட முடியுமா. மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த முகாம் நடத்தப்படுகிறது. முகாமால் அலுவலகப் பணியாளர்களை பார்க்க முடிவதில்லை. அவர்கள் அலுவலகத்திலும் முகாம் வேலையாகவே இருப்பதால் மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது.
சரவணன், அ. தி. மு. க., நகர பொருளாளர், நிலக்கோட்டை .
..............

மேலும்
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
-
ஒவ்வொரு வக்கீலும் நீதிபதி மீது புகார் அனுப்பினால் என்னாகும்?