குப்பை கிடங்கை இடம் மாற்ற கோரிக்கை
ஈரோடு, த.வெ.க., வெண்டிபாளையம் பகுதி இணை செயலர் சூர்யா தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சி, 60வது வார்டில் உள்ள வெண்டிபாளையத்தில், மாநகரின் குப்பை கிடங்கு செயல்படுகிறது. இங்கு தினமும் பல நுாறு டன் குப்பை கொட்டி, பல ஆயிரம் டன் குப்பை தேங்கி கிடக்கிறது. மழை காலங்களில் நனைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. வெயில் காலத்தில் தீ வைத்து எரித்து, மாசுபாட்டை ஏற்படுத்துகின்றனர். எப்போதும் துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதியில் வசிக்கும், பல ஆயிரம் குடும்பத்தினரால் வசிக்க இயலவில்லை. எனவே குப்பை கிடங்கை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதேபோல் த.வெ.க., ஈரோடு மாநகர் மாவட்ட துணை செயலர் மஞ்சு வழங்கிய மனுவில் கூறியதாவது: மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட திலகர் நகர் பகுதியில் இயந்திரம் மூலம் மரம் அறுக்கும் தொழில் மிகப்பெரிய அளவில் நடக்கிறது.
மரத்துகள் காற்றில் பறப்பதால், குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வீடுகள் முழுவதும் துாசியாக படிகிறது. தண்ணீர், உணவு பொருட்களை திறந்து வைக்க முடியவில்லை. இதுபற்றி ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஆஸி.மெக்குவாரி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
-
'கைதாகி ஜாமினில் வந்தவர் தானே'? சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி கேள்வி
-
'எமர்ஜன்சி' பட்டனை அழுத்திய மாணவரின் விமான பயணம் ரத்து
-
ஓ.டி.பி., பெறுவதற்கு தடை சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., மனு
-
ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்
-
முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு