எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாமல் அ.தி.மு.க., போஸ்டர்கள்

திண்டுக்கல்: அ.தி.மு.க., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாதது, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., இளைஞரணி, மாணவரணி உள்ளிட்டவற்றிற்கு புதிய நிர்வாகிகளை கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நியமித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, புதிய நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லை; பழனிசாமி படம் மட்டுமே பெரிதாக உள்ளது.




இதற்கு அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க., கிடையாது. ஆனால், அவர்கள் படங்கள் இல்லாத போஸ்டர்கள் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தும்.



இது குறித்து விளக்கம் கேட்குமாறு, கட்சி தலைமை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement