பர்லியாரில் முதல் முறையாக விளைந்த மஞ்சள் ரம்புட்டான்; விதை சேகரித்து நடவுக்கு ஏற்பாடு

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார் பர்லியார் தோட்டக்கலை பண்ணையில், துரியன், மங்குஸ்தான் உட்பட பல்வேறு பழ நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்கு வளர்க்கப்பட்ட ரம்புட்டான் மரத்தில் தற்போது முதல் முறையாக மஞ்சள் ரம்புட்டான் பழங்கள் விளைந்துள்ளன.
பொதுவாக சிவப்பு நிறத்தில் ரம்புட்டான் பழங்கள் வெளி மார்க்கெட்டில், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதில், மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த வகை ரம்புட்டான் பழம் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தது.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'ரம்புட்டான் பழங்களில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. ரம்புட்டானின் எளிதில் உரிக்கப்படக்கூடிய தோல் முதிர்ச்சியடையும் போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. இவை இனிப்பு மற்றும் நறுமண சுவை கொண்டவை. முதல் முறையாக இந்த மரத்தில் விளைந்த மஞ்சள் நில பழங்களின் விதைகள் சேகரித்து நாற்றுக்கள் தயார் செய்து வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
மேலும்
-
நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம்: தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்
-
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது; உயர்நீதிமன்றத்தில் வாதம்
-
முதல் அணுமின் நிலையத்திற்கு இலங்கையில் 5 இடங்கள் தேர்வு
-
பயணியர் ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி
-
கிராமத்து குழந்தைகளும் சாஸ்திரீய இசை கற்கலாம்
-
'அரசியல் அமைப்பு சட்டத்தையே விமர்சிப்பதற்கு சமம்'