பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!

14

திருச்சி: ''விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.


திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: சிபில் ஸ்கோரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர் கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்கக்கூடாது. விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர்ட் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.


பயிர் கடனுக்காக விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிர் கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு முடிந்து போன விஷயம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எதுனாலும் நடக்கலாம்.



நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். யூகங்கள் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அந்த நிலைப்பாட்டின் தான் முடிவு செய்வார்கள்.


எங்கள் கூட்டணியில் பாஜ உள்ளது. பாஜவில் பல கட்சிகள் இருக்கின்றன. இன்னும் 8 மாதம் காலம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணியில் யார்,யார் இருக்கிறார்கள் என்று பத்திரிகையையும், ஊடகத்தையையும் வைத்து தெளிவாக நான் குறிப்பிடுகிறேன், நன்றி வணக்கம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement