காற்றில் பறந்த அரசு பஸ் மேற்கூரை: பயணிகள் அச்சம்

6

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடுவரழியில் மேற்கூரை பல துண்டுகளாக கீழே விழுந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது. வடமதுரை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பஸ்சின் மேற்கூரை பல்வேறு துண்டுகளாக கீழே விழுந்தது.இதனால், பயணிகளுக்கு அச்சம் அடைந்தனர். உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பஸ்சை நிறுத்திய டிரைவர் , பயணிகளை கீழே இறக்கி, வேறு பஸ்சில் அனுப்பி வைத்தார்.


பின்னர், பெயர்ந்த தகரங்களை கயிற்றால் கட்டி வைத்த பிறகு, மெதுவாக பஸ்சை அரசு பஸ் டெப்போவுக்கு கொண்டு சென்றார்.

இது போன்ற பஸ்களால் பொது மக்களுக்கு ஆபத்து உள்ளது. ஓட்டை உடைசல் பஸ்களுக்கு பதில் வேறு பஸ்களை அனுப்ப வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement