அகத்தீஸ்வரர் கோலிலில் குவிந்த பக்தர்கள்

வில்லிவாக்கம், ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு, வில்லிவாக்கம், அகத்தீஸ்வர் கோலிலில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி பெண்கள் வழிபாடு செய்தனர்.

நேற்று ஆடி இரண்டாவது வார செவ்வாய் கிழமையை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அகத்தீஸ்வரர் மற்றும் அம்மாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் திறக்கப்படுவதற்கு முன்பே, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

ஏராளமான பெண் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருந்த புற்றுக்கு பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement