பல்வேறு வசதிகளுடன் பாரா விளையாட்டு மைதானம்

சென்னை, சென்னை, கீழ்பாக்கம் நேரு பூங்காவில் 2.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பாரா விளையாட்டு பேட்மிண்டன் மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

இந்த பாரா விளையாட்டு மைதானத்தில் அரைவட்ட திறந்தவெளி கூரை கொண்ட பாரா பேட்மிண்டன் மைதானம், உட்கார்ந்து விளையாடும் பாரா வாலிபால் மைதானம், பாரா டேபிள் டென்னிஸ் ஆடுகளம், பாரா போச்சியா ஆடுகளம், பாரா டேக்வாண்டோ ஆடுகளம், பாரா ஜுடோ ஆடுகளம், பாரா கோல்பால் மைதானம், பாரா பளுதுாக்குதல் பகுதி ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலகக் கட்டடம், உபகரணங்கள் வைக்கும் அறை மற்றும் சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையில் சாய்வு தளம் கொண்ட இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement