இலங்கைக்கு கடத்த இருந்த 2250 கிலோ பீடி இலை பறிமுதல் 

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்த கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 2250 கிலோ பீடி இலையை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை உச்சிப்புளி வெள்ளரி ஓடைப்பகுதியில்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் பைபர் படகில் 10 மூடைகளை ஏற்றியிருந்த கடத்தல்காரர்கள் கியூ பிரிவு போலீசாரை கண்டவுடன் கடலுக்குள் படகுடன் தப்பி ஓடினர்.

கடற்கரையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியில் 30 மூடைகளில் இருந்த 2250 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வெள்ளரி ஓடையை சேர்ந்த பாலகிருஷ்ணன் 45, கைது செய்யப்பட்டார்.

இந்த பீடி இலைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement