ரூ.38 லட்சம் கையாடல் பங்குதாரர் கைது

திருமங்கலம், தனியார் நிறுவனத்தில், 38 லட்சம் கையாடல் செய்த பங்குதாரரை போலீசார் கைது செய்தனர்.

கிழக்கு முகப்பேர், வசந்த தெரு, கோல்டன் சர்ச் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீத், 70. இவர், திருமங்கலம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், 'திருமங்கலம், யு.ஆர்., நகர், 2வது தெருவில், 'எய்ம் டிராவல்ஸ்' என்ற பெயரில், 2020 முதல் 'மேன் பவர் ஏஜன்சி' நடத்தி வருகிறேன்.

அதன் வாயிலாக, நபருக்கு, 5,500 ரூபாய் வசூலித்து, வெளிநாட்டிற்கு செவிலியர்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்கிறோம். நிறுவனத்தில், கிழக்கு அண்ணா நகரை சேர்ந்த அப்துல் வாஹித் என்பவர், 50 சதவீத பங்குதாரராக உள்ளார்.

' இவர், 38 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த போது, அப்துல் வாஹித், வெளிநாட்டிற்கு அனுப்பும் செவிலியர்களிடம் தனிப்பட்ட வகையில் பேசி, தன் வங்கி கணக்கிற்கு பணத்தை பெற்று கையாடல் செய்தது தெரிந்தது. போலீசார், அப்துல் வாஹித்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement