பாகிஸ்தானுக்கு உதவ தயார்!

பாகிஸ்தான் உட்பட உலகம் முழுதும் பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தானால் போராட முடியவில்லை என்றால், அந்நாட்டுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து இடங்களிலும், 'கில்லி'யாக செயல்படும் திறன் எங்களது ஆயுதப் படைகளுக்கு உள்ளன.
ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
பொறுப்பேற்க வேண்டும்!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து தட்டிக்கழிக்கக் கூடாது. பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில் காட்டும் ஆர்வத்தை, முக்கிய பிரச்னைகளிலும் பிரதமர் மோடி காட்ட வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
தோல்வி அடைந்து விட்டது! '
ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம் நடக்கும் வேளையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது. இதற்கு யார் பொறுப்பேற்பர்? பாதுகாப்பு விஷயத்தில் அரசு தோல்வி அடைந்து விட்டது.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்