கார் தீக்கிரை குழந்தைகளுடன் தப்பிய தம்பதி

கண்ணகி நகர், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று இரவு, ஓ.எம்.ஆர் எனும் பழைய மாமல்லபுரம் சாலையில் 'ரெனால்ட்' காரில் மனைவி, குழந்தைகளுடன் சோழிங்கநல்லுாரில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மேட்டுக்குப்பம் அருகில் சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. சுதாரித்த கிருஷ்ண குமார் சாலையோரம் காரை நிறுத்தி, மனைவி, குழந்தைகளுடன் கீழே இறங்கினார்.
துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்
Advertisement
Advertisement