தனியார் பள்ளியில் துப்பாக்கி சுடும் பயிற்சி; 8ம் வகுப்பு மாணவர் குண்டு பாய்ந்து காயம்
திருச்சி; தனியார் பள்ளியில், துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது, மா ணவரின் இடது கையில் குண்டு பாய்ந்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை -கோவில்பட்டி ரோட்டில் லட்சுமி மெட்ரிக்., பள்ளியில், கலெக்டர் அனுமதி பெறாமல், துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை காலை மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, வில் வித்தை பயிற்சி நடந்த போது, பயிற்சியாளர் அஜாக்கிரதையாக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆர்வத்தில் சுட்டுப்பார்க்க, அங்கே நின்றிருந்த மற்றொரு மாணவரின் இடது மேற்புற கையில் பால்ரஸ் குண்டு பாய்ந்தது.
வலியால் துடித்த மாணவரை, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பெற்றோரை வரவழைத்து, உயிருக்கு ஆபத்து எ ன நெருக்கடி கொடுத்து, சட்டவிரோதமாக கையில் ஆப்பரேஷன் செய்து குண்டை அகற்றியுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை. இங்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் ஜெகன், மணப்பாறையில் பல பள்ளிகளில், துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கிறார். இதற்காக, கலெக்டரிடம் அனுமதி எதுவும் பெறவில்லை.
ஜெகன் நட த்தி வரும் மணப்பாறை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி