ஆகாய தாமரை, நாணல், முட்புதரால் பகிங்ஹாமில் நீரோட்டம் பாதிப்பு

திருவொற்றியூர், பகிங்ஹாம் கால்வாயில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை, நாணல் மற்றும் முட்புதரால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் நீர்நிலைகளில் ஒன்றாக பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. சென்னையில் 42 கி.மீ., துாரம் ஓடி எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, பகிங்ஹாம் கால்வாயில் மழைநீர் நிரம்பி வழிந்தோடியது. அதிகபட்சமாக, வினாடிக்கு 5,000 கன அடி அளவிற்கு தண்ணீர் ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர் வழித்தடத்தில், ஆகாய தாமரை செடி அடர்ந்து வளர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில், 50 - 150 அடி பாத்தி கட்டியிருக்கும் ஆகாய தாமரைகளால் பகிங்ஹாமில் நீரோட்டம் தடைபடுகிறது.

தவிர, திருவொற்றியூர் - கார்கில் நகர் ஒட்டிய பகுதியில், 100 அடி அடைத்திருக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்றாமல் அப்படியே விட்டிருப்பதால், அதில், நாணல் மற்றும் முட்புதர் உள்ளிட்டவை வேரூன்ற து வங்கியுள்ளது.

இதனால், வெள்ளப்பெருக்கின்போது பெரும் தலைவலியாக முடியும் என, சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, மழைக்காலத்திற்கு முன், பகிங்ஹாம் கால்வாயில் நீரோட்டத்திற்கு தடையாக உள்ள செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement