விழுப்புரத்தில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

விழுப்புரம் : தினமலர் செய்தி எதிரொலியாக விழுப்புரம் நகரில் பயணிகள் நிழற்குடையில் ஒட்டப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றினர்.
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், விழுப்புரம் நகராட்சியில் நான்கு முனை சிக்னல் மற்றும் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைகள், மாம்பழப்பட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரில், ரயில் நிலையம் நுழைவு வாயில் பகுதிகளில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.
நிழற்குடைகளில் பேனர் ஒட்டுவதில் அடிக்கடி அரசியல் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், நகரில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசார் தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி மூன்று பயணிகள் நிழற்குடைகளில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதில், புதிய பஸ் நிலையம் எதிரில் வைத்திருந்த தி.மு.க., பேனரை பா.ம.க.,வினர் கிழித்ததால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, பயணிகள் நிழற்குடைகளில் ஒட்டப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
மேலும்
-
தாராபுரம் வக்கீல் கொலை வழக்கு சேலத்தில் 2 பேர் சுற்றிவளைப்பு
-
ரயில் சுரங்கப்பாதைக்கு நில அளவீடு எதிர்ப்பு தெரிவித்த 34 பேர் கைது
-
அறங்காவலர் குழு நியமனத்தை கண்டித்து அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
தனியார் நிறுவனத்தில் ரூ.71 லட்சம் மோசடி ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் மனித சங்கிலி