ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் மனித சங்கிலி

மல்லசமுத்திரம், உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி, மல்லசமுத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில், மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மல்லசமுத்திரம் சி.ஐ.டி., போலீஸ் சக்திவேல், பள்ளி தாளாளர் முத்துசாமி, பள்ளி முதல்வர் பழனிவேல், பள்ளியின் உளவியல் ஆலோசகர் ஐயப்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில், நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாத்தல் குறித்து, மனித சங்கிலி பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மல்லசமுத்திரம் அருகே, சோழீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி, டவுன் பஞ்., அலுவலகம் வரை, மாணவ, மாணவியர், மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள், விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவியரை பாராட்டினர்.

Advertisement