அறங்காவலர் குழு நியமனத்தை கண்டித்து அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
சேலம், சேலம், அரிசிபாளையத்தில் பழமையான சுளுக்கு பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலில், ஒன்றரை ஆண்டாக திருப்பணி நடக்கிறது. இதனிடையே இக்கோவிலுக்கு அறங்
காவலர்கள் நியமனம் செய்யப்பட்டதை கண்டித்து, ஊர்மக்கள் திரண்டு நேற்று மாலை, 4:00 மணிக்கு, 4 ரோட்டில் மறியலுக்கு முயன்றனர். பள்ளப்பட்டி போலீசார், அனுமதியின்றி மறியல் செய்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் திருப்பணி நடக்கும் நிலையில் அறங்காவலர்கள் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. கும்பாபி ேஷகம் முடிந்த பின், நியமனம் செய்ய வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கும்பாபிேஷகம் முடியும் வரை, நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். பின் பேச்சு நடத்தி அதிகாரிகள் நியமன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் நேற்று இரவு, அஸ்தம்பட்டி, டி.வி.எஸ்., நகரில் உள்ள அமைச்சர் ராஜேந்திரன் வீட்டை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அஸ்தம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.