ஸ்ரீவி.,யில் போக்குவரத்து நெருக்கடி; பஸ்ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியினால் வெளியூர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் சர்ச் சந்திப்பில் இறக்கி விட்டு செல்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், பள்ளி,வங்கிகள் உள்ளதால் இப் பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.

தற்போது பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடைகள் இடிக்கும் பணிகள் நடப்பதால் மேலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து மக்கள் எளிதில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் மதுரை, தேனி போன்ற வெளியூர்களில் இருந்து வரும் அரசு, தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வருவதை தவிர்த்து சர்ச் சந்திப்பில் இறக்கிவிட்டு செல்வதால் மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் பஸ் ஸ்டாண்டில் இருந்த கட்டணமில்லா கழிப்பிடம் இடிக்கப்பட்ட நிலையில், கட்டணக் கழிப்பிடத்தை தான் மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இவ்விரு பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement