இ.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு 18ல் துவக்கம்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், தனி தேர்வர்களுக்கான இ.எஸ்.எஸ்.எல்.சி. (8ம் வகுப்பு) தேர்வு வரும் 18ல் துவங்குகிறது. 12.5 வயது பூர்த்தியானவர்கள் தனி தேர்வராக இ.எஸ்.எஸ்.எல்.சி., (8ம் வகுப்பு) தேர்வு எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க தமிழக அரசு தேர்வு துறை அறிவுறுத்தி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் தனி தேர்வராக இ.எஸ்.எஸ்.எல்.சி., எழுத, 168 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கு வரும், 18ல் தமிழ் மொழி பாடத்தில் துவங்கி ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, 22ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டும் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வை நேரடியாக அதாவது தனி தேர்வராக எழுதலாம்.
டிரைவிங் லைசென்ஸ் பெற, அரசு துறையில் குறைந்தபட்ச கல்வி தகுதியுடன் பணியில் சேர விரும்புவோர் இத்தேர்வை எழுதுவர்.
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்