சிவகாசி பி.எஸ் ஆர்., பொறியியல் கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகாசி; சிவகாசி பி.எஸ் ஆர்., பொறியியல் கல்லுாரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், கல்வி ஆலோசகர் அஸ்வின் பங்கேற்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் பேசுகையில், மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை திறம்பட செயல்படுத்தி முன்னேற வேண்டும். எதிர்கால திட்டங்களோடு செயல்பட்டால் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம், என்றார்.

கல்வி ஆலோசகர் பேசுவையில், உயர்கல்விக்கான கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது அந்த கல்லுாரியின் தரம் தேர்ச்சி விகிதம் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு தேசிய தரச் சான்றிதழ்களான நாக், என்.பி.ஏ., ஐ.எஸ்.டி., போன்ற தகுதிகள் இருக்கும் கல்லுாரியை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும், என்றார். 12000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை செய்தனர்.

Advertisement