அறிவுசார் சொத்துரிமையை விரைந்து வணிகமாக்க வேண்டும் ஐ.என்.2டி.என்., முதல் மாநாட்டில் வலியுறுத்தல்

சென்னை:புதுமை கண்டுபிடிப்பாளர்கள், தங்கள் அறிவுசார் சொத்துரிமையை விரைந்து வணிகமயமாக்கிக் கொள்ள வேண்டுமென, ஐ.என்.2டி.என்., எனப்படும் இன்னோவேஷன் இன் தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தமிழகத்தில் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

அறிவுசார் சொத்துரிமையில் தமிழகத்தை நாட்டின் தலைநகராக விளங்கச் செய்யும் நோக்கிலான இந்த மாநாட்டை, தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும், தமிழக தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 16 ஆராய்ச்சியாளர்கள் தங்கள் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய, தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் தலைவர் அமித் ரஸ்தோகி, காப்புரிமை விண்ணப்பிப்பதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், 2023 - 24ம் நிதியாண்டில் 7,686 விண்ணப்பங்கள் வந்ததாகவும் தெரிவித்தார்.

புதுமை கண்டுபிடிப்பாளர்கள் உடனடியாக காப்புரிமை பெற்று விரைவாக வணிகரீதியாக பயன்படுத்த துவங்க வேண்டும் என, ஜெட்விர்க் நிறுவன எலக்ட்ரானிக் பிரிவு தலைவர் ஜோஷ் பவுல்கர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில், தமிழக தொழில்நுட்ப மைய துவக்க நிதியில் இருந்து ஐந்து, ஆழமான மற்றும் வளரும் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு பாத்பைண்டர் திட்டத்தின்கீழ் நிதியுதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.

ஏழு ஒப்பந்தங்கள்  ஐடிஎன்டி ஹப் உடன் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இந்தியா, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், கணினி மேம்பாட்டு மையம், பெங்களூரு, போஷ் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் & பொறியியல் உட்பட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  தொழில்துறை, கல்வித்துறை இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கத்தில் மாநாடு  தமிழக பொறியியல் கல்லுாரிகள், காப்பீட்டு மையங்கள், புத்தாக்க நிறுவனங்கள், முதலீட்டாளர்கள். தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், காப்புரிமையாளர்கள் என கிட்டத்தட்ட 1,500 பேர் பங்கேற்றனர்.

@block_B@ பல்வேறு பிரிவுகளில் நடந்த மாஸ்டர் வகுப்புகளில், 270 ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். காப்புரிமை விண்ணப்பித்தல், புதுமை கண்டுபிடிப்பை பாதுகாத்தல், காப்புரிமை, வணிக முத்திரை, ஸ்டார்ட்அப்பில் டிசைனுடன் கூடிய புதுமை கண்டுபிடிப்பு, உரிமம் பெறுதல், வணிகரீதியாக் கல் ஆகிய பிரிவுகளில் மாஸ்டர் வ குப்புகள் நடைபெற்றன.block_B

Advertisement