தென்மண்டல அளவில் நெட் பால் போட்டி கேரளா, தெலுங்கானா அணிகள் சாம்பியன்



மல்லசமுத்திரம், மல்லசமுத்திரத்தில், தமிழ்நாடு அமெச்சூர் நெட் பால் சங்கம், மஹேந்ரா கல்வி நிறுவனங்கள் சார்பில், இந்திய நெட் பால் சம்மேளன வழிகாட்டுதல்படி, தென் மண்டல நெட் பால் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டிகளை, தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவரும், மஹேந்ரா கல்வி நிறுவனங்களின் மேலாண் இயக்குனருமான மகா அஜய் பிரசாத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா ஆகிய, ஆறு மாநிலங்களை சேர்ந்த நெட் பால் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில், 17வது டிரெடிஷனல் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள், பெண்கள் பிரிவில் கேரளா அணி முதலிடம் பிடித்தது. தமிழகம், தெலுங்கானா, புதுச்சேரி அணிகள், 2, 3, 4ம் இடத்தை பிடித்தன.




இரண்டாவது பாஸ்ட் பைவ் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவில் தெலுங்கானா அணி முதலிடம் பிடித்தது. புதுச்சேரி, கேரளா, கர்நாடகா அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. மகளிர் பிரிவில், தெலுங்கானா அணி முதலிடம் பிடித்தது.

மஹேந்ரா பொறியியல் கல்லுாரி முதல்வர் சண்முகம், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், புல முதல்வர் நிர்மலா, தமிழ்நாடு நெட் பால் சங்க தலைவர் செல்வ அரசு, இந்திய நெட் பால் சம்மேளன இணை செயலாளர் விக்ரம் ஆதித்யா ஆகியோர், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement