மானிய விலையில் மக்காச்சோள விதைகள் பெறலாம்

பெ.நா.பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானிய விலையில் மக்காச்சோளம் விதைகள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை:
விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிறைவான மகசூல், கணிசமான லாபம் ஈட்டக்கூடிய முக்கிய பயிர்களில் மக்காச்சோளம் ஒன்று. இது பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. குறுகிய காலப்பயிர் என்பதால் பாசன நீர் குறைவாக இருக்கும். வயல்களுக்கு ஏற்ற பயிராகவும் உள்ளது.

தமிழக அரசின் வேளாண் துறை மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மக்காச்சோள செயல் விளக்க திடல் அமைக்கும் விவசாயி

களுக்கு, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள், உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு, 520 ஹெக்டேருக்கும், ஆதிதிராவிடர் பிரிவு விவசாயிகளுக்கு, 170 ஹெக்டேருக்கும், பழங்குடியினர் பிரிவு விவசாயிகளுக்கு, 30 ஹெக்டருக்கும், மக்காச்சோளம் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள், மானிய விலையில் வழங்க தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். மேற்கண்ட விதைகள் தேவைப்படும் விவசாயிகள், நில உடைமை சான்று, சிட்டா, ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவையுடன், வேளாண் விரிவாக்க அலுவலகத்தை அணுகி, மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement