நீட் தேர்வில் மாநில சாதனை; ஸ்ரீவி., மாணவருக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாணவர் நித்தின் பாபு நீட் தேர்வில் மாநில அளவில் ஆறாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் பாபு, இவரது மனைவி ஆக்னஸ் இதயசெல்வி, பல்கலை பேராசிரியர். இத்தம்பதியின் மகன் நித்தின் பாபு 17, துவக்க கல்வியை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளியிலும் படித்து விட்டு, நடப்பாண்டில் முதல்முறையாக நீட் தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவில் 720 க்கு 642 மார்க்குகள் பெற்று தமிழக அளவில் ஆறாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஜே.இ.இ. தேர்வில் 98.1 சதவீத மார்க் பெற்றுள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் பாராட்டினார்.

Advertisement