பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் டயர் உற்பத்தியாளர்கள் வரவேற்பு

புதுடில்லி:இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், டயர் மற்றும் ரப்பர் ஏற்றுமதிக்கு ஆதரவாக இருப்பதாக, இந்திய வாகன டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம், முக்கிய ஐரோப்பிய சந்தையான பிரிட்டனில், இந்திய டயர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கும். இது டயர் ஏற்றுமதியை மேலும் அதிகரித்து, வளர்ந்த சந்தைகளில் நுழைய உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், இந்தியாவின் டயர் ஏற்றுமதி, 25,000 கோடி ரூபாயாக உள்ளது. பிரிட்டனுக்கு, 732 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்தது. இது, முந்தைய நிதி ஆண்டை விட 11 சதவீதம் அதிகம்.

ஒப்பந்தத்தின் படி, உள்நாட்டு டயர் உற்பத்தியை பாதுகாக்க, பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு, 10 ஆண்டு கால இடைவெளியில் இறக்கு மதி வரி குறைக்கப்படுகிறது.

இந்த ஒப் பந்தம், இறக்குமதி வரி குறைப்பாக மட்டும் இல்லாமல், தொழில் துறை ஒருங்கிணைப்பு, முதலீட்டு வளர்ச்சி மற்றும் பொருளாதார கூட்டணியை பலப்படுத்த உதவுகிறது.

Advertisement