ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் 'டாஸ்மாக்' விருதையில் பயணிகள் அச்சம்
வி ருத் தாசலம் ரயில்வே ஸ்டேஷன் மூலம் கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் அரசு, தனியார் அலுவலங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் செல்கின்றனர். சமீபத்தில் 9.5 கோடி ரூபாயில் நவீனமாக மேம்படுத்திய நிலையில், மதுப்பிரியர்கள் தொ ந்தரவு அதிகரித்துள்ளது.
ரயில்வே ஸ்டேஷன் மு கப்பில் டாஸ்மாக் கடை இருப்பதால், பகல் 12:00 மணிக்கு கடை திறந்ததும் மது அருந்தும் நபர்கள், போதை தலைக்கேறிய நிலையில், ரயில் நிலைய முகப்பில் ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் பெண் பயணிகளிடம் ஆபாசமாக பேசுவது, ஒழுங்கீனமாக நடக்கும் செயல்கள் தொடர்கிறது.
மேலும், போதையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டும்போது பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டியபோது, இடமாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக பிரச்னை மற்றும் வருவாய் பாதிப்பை காரணம் காட்டி, இடமாற்றும் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடையும் ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்ற மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மக்கள் பிரதிநிதிகள், ஆர்.டி.ஓ., ஆகியோர் நேரில் ஆய்வு செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.