6-9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் இயக்க பயிற்சி முகாம்

நாமக்கல், தமிழக அரசு, அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'மாணவர்களுக்கு திறன் முனைப்பு இயக்கம்' என்ற திட்டம் நடப்பு கல்வியாண்டில் தொடங்கி உள்ளது.

நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, ஆங்கிலம், தமிழ், கணித பாடங்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கு, திறன் இயக்க பயிற்சி முகாம் இரண்டு கட்டங்களாக நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்த பயிற்சி முகாமை, நிறுவன முதல்வர் செல்வம் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் புஷ்பராஜ், பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், அடிப்படை கற்றல் அடைவு பெறும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திறன் திட்டத்தில், பயிற்சி ஏடுகள் அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்படும். அதில் அவர்கள் பெரும் மதிப்பெண்கள், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு செய்யப்படும். மாதம் ஒருமுறை கல்வி அலுவலர்களால் மீளாய்வு நடத்தப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.

Advertisement