புகையிலை விழிப்புணர்வு 

திருக்கனுார் : திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் ஹரீஷ்குமார் வரவேற்றார். திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ சவுந்தரபாண்டியன் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புகையிலை பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

காசநோய் மக்கள் தொடர்பு அதிகாரி மணிமாறன், புகையிலை பயன் படுத்துவதால் ஏற்படும் காசநோய், புற்று நோய்களின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில், சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள் முன்னிலையில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

பள்ளியின் நிர்வாக இயக்குநர் மோகன்குமார் நன்றி கூறினார்.

Advertisement