இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து வாலிபர் இறப்பு

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே இறுதி ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்ததில், மேளம் வாசித்த வாலிபர் உயிரிழந்தார்.

உளுந்துார் பேட்டை அடுத்த கீழ்குப்பம் வேலுார் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை, 60. இவர், இறந்ததையடுத்து, நேற்று மாலை இறுதி ஊர்வலம் நடந்தது.

அப்போது, வாண வெடி வெடித்தபோது, தீப்பொறி விழுந்ததில், பட்டாசு பண்டல்கள் வெடித்து சிதறின. இதில், இறுதி ஊர்வலத்தில் மேளம் வாசித்து கொண்டு சென்ற உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் மூர்த்தி, 23; பலத்த காயமடந்து சம்பவ இடத்திலே இறந்தார்.

வெடி விபத்தில் அயன்வேலுார் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, 50; ராமலிங்கம், 45; கீழ்குப்பம் வேலுார் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல், 45; பிரகாஷ், 36; அயோத்தி மனைவி ஜெயா, 55; ஆகிய ஐவர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement