சென்னை - பெங்., விரைவு சாலை சுங்க கட்டணங்கள் அறிவிப்பு

கோலார் : திறப்பு விழாவிற்கு முன்னதாகவே சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை வழித்தடத்தில் சுங்க கட்டணங்களை என்.எச்.ஏ.ஐ., எனும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் ஹொசகோட், மாலுார், பங்காருபேட்டை, பேத்தமங்களா, தங்கவயல் பெமல் நகர் வழியே சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை வழித்தடமானது, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னையை பெங்களூருடன் இணைக்கிறது. இது மொத்தம் 288 கி.மீ., நீளம் கொண்டது.
பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை குறைப்பதும் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. கர்நாடகாவுக்கு உட்பட்ட பகுதியில் 71 கி.மீ., இந்த சாலை செல்கிறது. இந்த பகுதியில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. இதற்காக ஏறக்குறைய 17,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக சாலை திறக்கப்படாவிட்டாலும் கூட, கர்நாடக எல்லைக்குள் சாலையில் கடந்த ஏழு மாதங்களாக போக்குவரத்து நடைபெறுகிறது.
அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கிலோமீட்டர். சில இடங்களில் அறிவியல் பூர்வமாக சாலை அமைக்கப்படாததால் விபத்துகள் நேர்வதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகாவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த வழித்தடத்தில் கர்நாடகாவின் எல்லைக்குள் ஹொசகோட் அருகே ஹெடிகெனபேலே, மாலுார் அக்ரஹாரா, கிருஷ்ணராஜபுரா, தங்கவயல் அருகே சுந்தரப்பாளையா ஆகிய நான்கு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பயணம் செய்யும் தொலைவின் அடிப்படையில் அவற்றுக்கான கட்டணங்களை என்.எச்.ஏ.ஐ., முதன்முறையாக நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே மாதாந்திர பாஸ் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
@quote@ முடிவாகவில்லை சுங்கவரி வசூல் செய்வதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதிகாரியுடன் கலந்துரையாடிய பிறகு முடிவு எடுக்கப்படும். எம்.மல்லேஸ்பாபு, எம்.பி., கோலார்.quote
@quote@ சென்னை - பெங்களூரு விரைவு சாலை வழித்தடத்தில் தற்போது சுங்கவரி வசூல் செய்யப்படவில்லை. இதை செயல்படுத்துவதற்கு முன்பு, பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவோம். -அர்ச்சனா, திட்ட இயக்குநர், சென்னை - பெங்களூரு விரைவு வழித்தடம்quote
@block_B@ ஹொசகோட் - சுந்தரபாளையா வாகனம் செல்ல சென்றுவர மாதாந்திர பாஸ் கார், ஜீப் 185 275 6,105 மினி பஸ் 295 445 9865 லாரி, பஸ் 620 930 20,665 **** மாலுார் அக்ரஹாரா -சுந்தரபாளையா கார், ஜீப் 125 185 4,100 மினி பஸ் 200 300 6,620 லாரி, பஸ் 415 625 13,870 *** கிருஷ்ணராஜபுரா - சுந்தரபாளையா கார், ஜீப் 45 70 1,570 மினி பஸ் 75 115 2,540 லாரி, பஸ் 160 240 5,320 *** சுந்தரப்பாளையா - ஹொசகோட் கார் ஜீப் 190 280 6,260 மினி பஸ் 305 455 10,115 லாரி, பஸ் 635 955 21,190 *** கிருஷ்ணராஜபுரா- - ஹொசகோட் கார், ஜீப் 185 230- 5,100 மினி பஸ் 250 370 8,255 லாரி, பஸ் 520- 780- 17,295 *** மாலுார் அக்ரஹாரா- - ஹொசகோட் கார், ஜீப் 70 100 2,260 மினி பஸ் 110 265 3,655 லாரி, பஸ் 230 345 7,655block_B
மேலும்
-
கோலாரை சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை கண்டிராத புது வகை ரத்தம்
-
ஆன்லைன் மோசடி வழக்கு: மும்பை ஆசாமிகள் கைது புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
-
எலக்ட்ரிக் பைக் பேட்டரி சரி செய்யாத மோட்டார்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
-
புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
-
கொள்ளையடிக்க திட்டம்: நெய்வேலியில் 9 பேர் கைது
-
நெஞ்சுவலியால் ரயில்வே மேலாளர் திடீர் மரணம்